MARC காட்சி

Back
ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் குடைவரை
245 : _ _ |a ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் குடைவரை -
300 : _ _ |a குடைவரை
500 : _ _ |a இது கி.பி. 770 ஆம் ஆண்டு ஜடில பராந்தகநெடுஞ்சடையனது காலத்தில் அவனுடைய அமைச்சராகிய மாறன் காரியால் தொடக்கப்பட்டு இடையில் அவர் மறைந்தபடியால் அவர் தம்பி மாறன் எயினனால் முடிக்கப்பட்டது. இதன்கண் கருவறையில் நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் யோகப் பட்டையுடன் அழகுறக் காணப்படுகின்றார். இரு முழங்கால்களையும் இணைக்கும் துணியாலான இணைப்பு யோகப் பட்டை எனப்படும், நான்கு கரங்களுடன் படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் பின்னிரு கைகள் சங்கு சக்கரத்துடனும் முன்னிரு கைகள் அபய வரத முத்திரையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது ஐந்தடி உயரப் புடைப்புச் சிற்பம் ஆகும்.
510 : _ _ |a தி.இராசமாணிக்கம், தென்னகக் குடைவரைக் கோயில்கள், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1989. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000.நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ
520 : _ _ |a நரசிங்கம் யோகநரசிங்கப் பெருமாள் கோயில் (அ) யோக நரசிம்மர் கோயில் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள நரசிங்கம் எனும் இடத்தில் அமைந்த தொன்மையான குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவில் மதுரைப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு- காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறன் காரி என்பவரால் கி.பி. 770-இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின் சகோதரர் மாறன் எயினன் இக்கோவிலுக்கு ஒரு முகமண்டபத்தைக் கட்டினார். கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும்.
653 : _ _ |a தமிழ்நாடு, குடைவரை, குடவரை, குடைவரைக் கோயில்கள், தென்னகக் குடைவரைகள், தமிழ்நாட்டு குடைவரைக் கோயில்கள், பாண்டியர் குடைவரைகள், குகை, குகைக் கோயில், ஒத்தக்கடை, ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில், ஆனைமலை, யானைமலை, யோக நரசிங்கப் பெதுமாள், மாறன்காரி, மாறன் எயினன், களக்குடி, விஷ்ணு குடைவரை, மதுரை, மதுரை மாவட்டத் தொல்லியல் தொல்லியல் சி்ன்னம், முற்காலப் பாண்டியர் குடைவரைகள், சின்னம், தமிழக வரலாற்றுச் சின்னங்கள், தமிழகத் தொல்லியல், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
700 : _ _ |a சென்னைப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a ஆனைமலை அடிவாரம் |c ஒத்தக்கடை |d மதுரை |f மதுரை கிழக்கு வட்டம்
906 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 9.9669447319897
915 : _ _ |a 78.189030610189
934 : _ _ |a இலாடன் கோயில், ஆனைமலை சமணர் குடைவரை, ஆனைமலை தமிழ்-பிராமிக் கல்வெட்டு
995 : _ _ |a TVA_MON_00119
barcode : TVA_MON_00119
book category : குடைவரைக் கோயில்கள்
cover :
Primary File :

TVA_MON_00119/TVA_MON_00119_மதுரை_ஒத்தக்கடை_குடைவரைக்-கோயில்-0001.jpg

TVA_MON_00119/TVA_MON_00119_மதுரை_ஒத்தக்கடை_குடைவரைக்-கோயில்-0002.jpg

TVA_MON_00119/TVA_MON_00119_மதுரை_ஒத்தக்கடை_குடைவரைக்-கோயில்-0003.jpg

TVA_MON_00119/TVA_MON_00119_மதுரை_ஒத்தக்கடை_குடைவரைக்-கோயில்-0004.jpg